மென் அணுகுண்டு பாகம் 2
![]() |
| Featured Image |
அனைவருக்கும் வணக்கம்!
![]() |
| https://en.wikipedia.org/wiki/Atomic_bombings_of_Hiroshima_and_Nagasaki |
![]() |
| https://www.life.com/history/hiroshima-and-nagasaki-photos-from-the-ruins/ |
![]() |
| https://www.icanw.org/hiroshima_and_nagasaki_bombings |
சரி இந்த மென் அணுகுண்டு எப்படி செயல்படும் வேதியியல் அணுகுண்டை விட 80 மடங்கு அதிக வீரியமா செயல்படும், நீங்க என்ன நினைக்கிறீங்க! நீங்க பார்க்குற ஒரு ஒரு வீடியோ ஒரு ஒரு தகவலும் நீங்க உங்க விருப்பத்திற்கு ஏற்ப பார்கிறீங்களா? இல்ல!
ஒரு பெரிய குழு நீங்க என்ன பார்க்கணும் உங்க சிந்தனை எப்படி இருக்கணும் எதை தேடி நீங்க ஓடனும் உங்க மூளை எதற்கு அடிமை ஆகணும் என்று மிக ஆழமாக ஒரு உளவியல் குழு கொண்டு செல்லப்படுகிறது.
சரி அப்படி என்ன தேவை இருக்கு இந்த மற்ற உலகநாடுகளுக்கு நம் இந்தியர்கள் மேல உளவியல் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி என்ன சாதிக்க போறாங்க?
உங்களுடைய இந்த கேள்வி விழிப்புணர்வின் இருக்கிற மிச்சம் மீதி!
உங்க கேள்விக்கு பதில் - சந்தை.
ஆமா ஒரு சந்தை, அந்த சந்தை உற்பத்தியாளர் நினைக்கிறது மட்டும் தான் செய்யும் அப்படி ஒரு சந்தையை உருவாக்கத்தான் பல நூறு வருட போராட்டமா மற்ற நாடுகள் செஞ்சிட்டு இருக்கு.
நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த ஒரு நிகழ்வு ஒரு வணிக ஒப்பந்தம், இந்தியாவில் வணிகத்திற்காக வந்த மற்ற நாடுகள் இங்கு இருந்த மக்களை அவர்களின் நுகர்வோராக மாற்ற முயற்ச்சி செஞ்சாங்க நம் பார்வைக்கு அது அடிமைப்படுத்தினார்கள் என்று தெரியும்.
ஆம் உண்மையே, மற்ற நாடுகள் நம் நாட்டின் வளங்களை குறி வைத்தது நில பரப்புகளை குறி வைத்தது மனித வளங்களை குறி வைத்தது இவை மூன்றும் இருந்தால் பெரும் நுகர்வோர் உற்பத்திகளை உருவாக்கலாம்.
மற்ற நாடுகள் இவை மூன்றையும் கைப்பற்றியது, ஒரு ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்கியது. அவர்களின் சொந்த நாட்டிற்கு நம் நாட்டின் வளங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது, சில வருடங்களில் அவர்களுக்கு ஒரு புள்ளிவிவரம் தெரியவந்தது மற்ற நாடுகளை விட இந்த நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்று இந்த புள்ளிவிவரத்தின் பலனாக அவர்களுக்கு நான்காவது வளம் கிடைத்தது ஆம் சந்தை.
சந்தை ஒரு நான்காவது வளமாக இருந்தது. அதை தொடர்ந்து கண்காணிக்க துவங்குகிறார்கள் அப்படி கண்காணித்ததில் டிமாண்ட் & சப்ளை தேவை மற்றும் வழங்கல் என்ற ஒரு விதி அவர்களுக்கு பிடிபட்டது அந்த விதி முழுக்க முழுக்க செய்திகளால் மற்றும் தகவல்களால் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த செய்தி மற்றும் தகவல் மக்களிடம் இருந்து மக்களுக்கே என்று பகிர்ந்து கொண்டு இருந்தார்கள் அரசு தரப்பு தகவல் அறிவிப்பாக இருக்கும் நிறுவன தரப்பு தகவல் விளம்பரமாக இருக்கும் இவை இரண்டையும் கொண்டு தான் மக்கள் அவர்களுக்கு ஏற்றவாறு தகவல் மற்றும் செய்திகளை உருவாக்கி கொண்டார்கள்.
சந்தை வளத்தை புரிந்த நாடுகள் இந்த மக்களின் தகவல் மற்றும் செய்திகளில் அவர்களின் ஆதிக்கத்தை செலுத்த விரும்பினார்கள் இந்த மக்களின் செய்தி மற்றும் தகவல் டிமாண்ட் & சப்ளை தேவை மற்றும் வழங்கல் நடவடிக்கையை நேரடியாக பாதித்தது
டிமாண்ட் & சப்ளை இவை சந்தையை நேரடியாக ஆதிக்கம் செலுத்தியது அந்த ஆதிக்கம் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்தது. எனவே மற்ற நாடுகளுக்கு ஒரு விடையம் புரியவந்தது இந்த மக்களின் செய்தி மற்றும் தகவலை கட்டுப்படுத்தினால் மட்டுமே இங்கு பிழைக்க முடியும் என்று.
எனவே அவர்கள் மக்களின் மக்களாக ஒருவரை புழக்கத்தில் விட்டு அவர்களுக்கு ஏற்ற செய்தி மற்றும் தகவலை பொது மக்களிடம் புழங்க செய்தார்கள் அந்த திட்டம் மிக வீரியமாக மற்றும் பரவலாக செயல்பட்டது.
இந்த தருணத்தில் தான் மற்ற நாடுகளுக்கு நம் நாட்டின் ஒரு மிக பெரிய உளவியல் வெளிச்சத்திற்கு வந்தது, ஆம் 500 மேற்பட்ட குறு நில மன்னர்களால் நம் நாடு ஆளப்பட்டது மன்னர்களிடம் ஒரு செயல்பாடு இருந்தது ஒரு நாட்டு மன்னன் பக்கத்து நாட்டு மன்னரைவிட சிறந்து விளங்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை செய்து வந்தார்கள் அந்த செயல்பாடு மக்களிடமும் பரவலாக இருந்தது மற்றவர்களை பார்த்து நாம் அதைவிட சிறப்பானவர்களா என்று அளவிடுவது இது ஒரு மனித உளவியல்.
![]() |
| https://www.verywellmind.com/what-is-the-social-comparison-process-2795872 |
நாட்டு சுதந்திரத்துக்கு முன்பு வணிகம் பலவீனம் அடைந்து இருந்தது ஏன்?
மக்கள் போராட துவங்கிவிட்டார்கள் புரட்சி வெடிக்க துவங்கியது நம் நாட்டின் பல சிறு சிறு ஊர்களில் புரட்சி மற்றும் விடுதலை தாகம் தீயாக பரவ துவங்கியது இதன் காரணமாக வணிகம் மிக மந்தம் அடைந்து இருந்தது.
இந்த தருணத்தில் தான் ஒரு உளவியல் தீர்வு கிடைத்தது மற்ற நாடுகளுக்கு,
(இங்கு நான் மற்ற நாடுகள் என்று குறிப்பிடுவதற்கு காரணம் கிழக்கிந்திய கம்பெனி மட்டும் நம் நாட்டை ஆளவில்லை என்பதற்குதான்)
![]() |
| https://www.bbc.co.uk/bitesize/articles/zx8sf82#zcyq2v4 |
இவர்களுக்கு தேவையான (டிமாண்ட்) சுதந்திரத்தை கொடுத்து விடலாம் மிக நிச்சயமாக மற்ற நாடுகள் உருவாக்கிய தொழிற்சாலை, இயந்திரம் மற்றும் கட்டமைப்பை பயன்படுத்திதான் இவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள்.
நாம் நம் சொந்த நாட்டிற்கு சென்று அவர்களின் அண்டை நாடாக பிரதிபலிக்கலாம் மிக நிச்சயமாக நம்மை போன்று வாழ நம்மிடமே போட்டி போடுவார்கள் இந்திய உளவியல் அப்படி அந்த சமயம் அவர்கள் எதை பார்த்து போட்டியிட வேண்டும் என்று நாம் நிர்ணயிப்போம் அதே சமயம் பல மன்னர்களின் ஆட்சியில் நாட்டை கொடுத்தால் அனைவரையும் ஒரு வணிக கூரைகள் கொண்டுவர சிரமமாக இருக்கும் எனவே நம் பேச்சை கேட்கும் நபர்களை கூப்பிட்டு அவர்களே ஆட்சி செய்வது போல் கட்டமைத்து விடலாம் வணிகத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
![]() |
| https://en.wikipedia.org/wiki/Indian_Independence_Act_1947 |
இவை சரியாக நடந்தால் நாம் நம் சொந்த நாட்டில் இருந்து கொண்டே இவர்களை நம் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற மிக கனகட்சிதமாக தீட்டப்பட்ட திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது வென்றது.
அதன் அடிப்படையில் மற்ற நாட்டுக்காரர்களுக்கு யார் எல்லாம் அடிபணிந்தார்களோ அவர்கள் எல்லாம் தேச வரலாற்றில் இடம் பெற்றார்கள்.
யார் எல்லாம் அவர்களின் வணிக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களோ அவர்கள் எல்லாம் தேச விரோதி தீவிரவாதி குண்டர்கள் சாதிய தலைவர்கள் என்று வகுக்கப்பட்டு வகுப்பறைகளில் அவர்கள் பெயர் ஒலிக்கப்படாமல் செய்தார்கள்.
மற்ற நாடுகள் சந்தை திட்டத்தை நம் நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் பாட திட்டங்களில் இருந்து துவங்கினார்கள்.
நாம் எப்படி இந்த சந்தைக்குள் வர வேண்டும் என்று நிர்ணயம் செய்தார்கள், நாம் எப்படி ஒரு நிறுவனத்தின் கூலி ஆக வேண்டும் என்று கற்பித்தார்கள், நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்று பக்குவப்படுத்தினர்கள், நாம் எப்படி நுகர்வோராகவே இருக்க வேண்டும் என்று தீர்மானங்கள் ஏற்றினார்கள் நாம் எதன் பொருட்டு முரண் பட வேண்டும் நாம் எதன் பொருட்டு விவாதம் செய்ய வேண்டும் என்று பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள் இவை அனைத்தும் 100% இன்றளவும் நடைமுறையில் இருந்து கொண்டே இருக்கிறது சிறிது வடிவம் மாறி இருக்கிறது.
அணுகுண்டு வீசினால் நுகர்வோர்கள் அழிக்க படுகிறார்கள் எப்படி இந்த அணுகுண்டை அதன் வீரியம் குறையாமல் மென்மைப்படுத்துவது நுகர்வோர்கள் உயிரோடு இருக்க வேண்டும் விழுப்புணர்வு அற்று உடல் ரீதியாக மட்டும் என்று மிக தீவிர ஆராய்ச்சியின் முடிவில் மென் அணுகுண்டுகள் விடையாக கிடைத்தது.
சமூக வலைதளம் என்ற அந்த ஆயுதம்
மிக கச்சிதமாக அந்த குறு நில மன்னரின் உளவியலை அடிப்படையாக வைத்தே உருவாக்க பட்டது.
சமூக வலைதளத்தில் முதல் கட்டமாக மற்றவர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம்.
அது எதற்கு சமம் என்றால் பக்கத்து வீட்டுக்காரணை கூப்பிட்டு நீ என்ன நினைத்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்பதற்கு சமம், அந்த பக்கத்து வீட்டுக்காரன் இன்றைக்கு கோழி கறி வாங்கி சமைக்கலாம் என்று இருக்கிறேன் என்று கூறினாள் உங்கள் மூளையில் ஒரு பொறி தட்டும் இவனே கறி எடுத்து சாப்பிடும் போது நான் ஏன் எடுக்க கூடாது என்று.
இது தான் அந்த உளவியல். காலம் கடக்க கடக்க நம் மூளை சில செயல்பாட்டுக்கு பழக்க பட்டு தானே இயங்க துவங்கும் அப்பொழுது புதுமை இல்லை என்று சலிப்பு தட்டும் அந்தசமயம் சந்தை நிலை மந்தம் அடையும் ஒரு புதுமை இருந்தால் தான் சந்தை நிலையற்ற தன்மையை பெரும் நிலையற்ற சந்தை தோண்ட தோண்ட தங்கம் கிடைப்பதற்கு சமம்.
எனவே அடுத்த கட்ட சமூக வலைதளம் ஒரு புதுமையை கொண்டு வந்தது புகைப்படம், எல்லோரும் சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரனின் வீட்டிற்குள் எட்டிப்பார்களாம்!
தொடரும்...
அன்புடன்
ராஜூ சீனுவாசன்
தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க
இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
rajuseenu72@gmail.com






.svg.webp)
Comments
Post a Comment